முகப்பு | தொடர்பு கொள்ள | திருப்பலி நேரம் | வரைபடம் | அறிவிப்புக்கள்
puliampatti st.anthony church கருத்துகளை பதிவு செய்ய   puliampatti st.anthony church நண்பருக்கு அனுப்ப   puliampatti St.anthony church நகல் எடுக்க   puliampatti st.anthony church puliampatti st.anthony church  

ஆராதனை ஆலயம் “தபோர்”

பழைய ஏற்பாட்டில் கடவுள் இசுராயேல் என்ற சிறிய ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் உறைவிடம் கொள்ள திருவுளம் கொண்டார் (லேவி. 26.11-12). பின்னர் அவரது உடனிருப்பை சந்திப்ப கூடாரம் வழியாய் வெளிப்படுத்தினார் (வி.ப. 40.34). அவர்கள் செல்லும் இடமெல்லாம் சென்றார். இறுதியில் கடவுளின் உடனிருப்பு ஆழுத்தமாக ஆண்டவர் இயேசு கிறித்துவின் வழியாய் வெளிப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அன்னை மரியாளின் திருவயிற்றில் உறைவிடம் எடுத்த மீட்பர் நற்கருணை வழியாகத்தானே இன்று மனித இனத்திற்குத் இறைத்தன்மை வாழ்விற்கு ஊற்றாக திகழ்கின்றார்.

“மாபெரும் யூபிலி 2000” நற்கருணை ஆண்டு எனத் திருத்தந்தை 2 ஆம் அருள் சின்னப்பர் அறிவித்தது எவ்வளவு பொருத்தமானது! பொருள் மிகுந்தது!! அந்த நற்கருணை ஆண்டு நினைவாக, புளியம்பட்டி தூய அந்தோனியார் திருத்தல வளாகத்திலேயே தஞ்சம் கொண்டிருக்கும் எளியோருக்கும், நலிந்தோருக்கும் ஆண்டவர் இயேசு கிறித்துவின் உடனிருப்பை அழுத்தமாய் தெரிவிக்க “ஆராதனை ஆலயம் தபோர்” உருவாக்கப்பட்டது. 05.12.2000 செவ்வாய்க் கிழமை அன்று மதியம் நடைபெற்ற திருப்பயணிகளுக்கான திருப்பலியில் மேதகு இருதயராஜ் ஆண்டகை அவர்கள் அர்ச்சித்துத் தறந்து வைத்தார்.

“தபோர்” அமைந்துள்ள இடமும் சரியான இடமே. ஏனென்றால் திருத்தலத்தின் பின் புறம் தான் நோயாளிகள், குறிப்பாக தீய ஆவியால் அவதிபடுவோர் அமர்ந்து குணம் பெற செபம் செய்து கொண்டிருப்பர். இந்த செயலை பொருளுள்ளதாக்க ஆராதனை ஆலயம் இங்கு அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

மேலும சந்தடி நிறைந்த வளாகத்தில், திருப்பயணிகள் தனித்து செபிக்க, தியானிக்க திருத்தலத்தின் சிறப்பு அம்சமாக தபோர் இருக்கின்றது. “நமது இறைநம்பிக்கை வாழ்விற்கு ஊற்றும் உய்வுமாக இருப்பது நற்கருணையே” (ளுயஉசயளயnஉவரஅ ஊழnஉடைரைஅ 10) என்ற 2 ஆம் வத்திக்கான் படிப்பினைக்கு இம்முயற்ச்சி அழகு சேர்கின்றது.

திருத்தல பக்தர்களுக்கு, இங்கு அழுத்தமாக யாம் சொல்வது “அந்தோனியார் வழியாக இயேசுவிடம்” என்பது தான்.

நற்கருணை ஆலயம் பக்தர்கள் செல்ல மறவாத இடம்!
 

Photo Gallery

கோடி அற்புதர் பெற
மின்னஞ்சல் செய்தி பெற
puliampattichurch, st.anthony

ஒலி ஒளி தொகுப்பு

puliampattichurch, st.anthony

புகைப்படங்கள்

online witness, puliampattichurch, st.anthony

பக்தர் சாட்சிப் பதிவு

puliampattichurch, st.anthony

இவ்வார பக்தர்

puliampattichurch, st.anthony

நன்கொடைகள்



உங்கள் கருத்துக்கள் / YOUR FEEDBACK :

Name * Country *

Email *

Newsletter

'புனித' can be typed as 'punitha' in english

இந்த பெட்டகத்தில் ஆங்கில வடிவில் உங்கள் கருத்தைத் தட்டச்சு செய்தால், கீழுள்ள பெட்டகத்தில் தங்கள் கருத்தினை தமிழில் காணலாம்.
(
English content typed in this box will be shown in tamil in the bottom box.

Note: You can also send your feedback in English - type in the first box)