முகப்பு | தொடர்பு கொள்ள | திருப்பலி நேரம் | வரைபடம் | அறிவிப்புக்கள்
puliampatti st.anthony church கருத்துகளை பதிவு செய்ய   puliampatti st.anthony church நண்பருக்கு அனுப்ப   puliampatti St.anthony church நகல் எடுக்க   puliampatti st.anthony church puliampatti st.anthony church  

தூய அந்தோனியார் திருத்தலக் கோவில்

19 ஆம் நூற்றாண்டில் தென் மாவட்டங்களின் மேற்பார்வையாளராக இருந்தவர் அருள்பணியாளர் கிரகுவார் சே.ச. அவர் தனது நாள் குறிப்பேட்டில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார். On the 14th September 1851 from Sivalaperi I had a run to Puliyampatti to visit the Church of St. Anthony which is a building – the Kiln for baking bricks is ready” இதன் மூலம் 1851 ஆம் ஆண்டிற்குப் பின் இப்பகுதியில் பணியாற்றிய குருவின் மேற்பார்வையில்தான் கூரைக் கோயில் மாற்றப்பட்டு 12’ x 10’ x 12’  என்ற அளவுள்ள வளைவுக் கூரைக் கொண்ட செங்கல் கட்டுமானச் சிற்றாலயம் கட்டப்பட்டுள்ளது தெரிய வருகின்றது. அந்நாட்களிலேயே கோவிலின் நிர்வாகமும் உரிமையும் குருக்களின் கைகளிலேதான் இருந்துள்ளது என்பது உறுதி. இது பற்றிய சர்ச்சை இடையில் எழுந்த போது கூட நீதிமன்றம் குருக்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்த நிகழ்ச்சியும் உண்டு.

 பல ஆண்டுகள் கழித்து தொம்மை அந்தோனி என்பவரின் பெண் வமச வழி வந்த மிக்கேல் என்பவர் கோவில் உரிமை தொடர்பாகக் கத்தோலிக்க மி~னுக்கு எதிராக வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ததாகத் தெரிகிறது. அதன் செலவுகளுக்காக கோவிலின் அருகில் இருந்த நிலத்தைத் தூத்துக்குடி பூபால்ராயர் என்பவரிடம் அடமானம் வைத்து பணம் வாங்கியதாக அறிய முடிகிறது. 1903 இல் பன்னீர்குளம் தனிப்பங்காக உருவாகி அதன் நிர்வாகத்தில் புளியம்பட்டி இணைக்கப்பட்டது. பன்னீர்குளம் பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்ற அருள்மிகு சிலுவை அடிகளார் காலத்தில் நீண்ட போராட்டத்திற்குப் பின் கோவில் உரிமை வழக்கில் திருச்சபைக்கே வெற்றி கிடைத்தது.

இந்த காலக் கட்டத்தில் திருப்பயணிகள் திரள் திரளாக வரத் தொடங்கினர். வழிபாட்டு வசதிகாக 1913 இல் பன்னீர்குளத்தில் பங்குத் தந்தையாக இருந்த அருள்பணியாளர் சிலுவை அடிகளார் அவர்களால் ஏற்கனவே இருந்த வளைவுக் கூரைக் கொண்ட செங்கல் கட்டுமானச் சிற்றாலயத்தின் விரிவாக்கமாக முன்பகுதியில் மண்சுவருடன் கூடிய ஓட்டுக் கூரையாலான சிறிய மண்டபம் உருவானது.

 கூட்டமாக வரும் பக்தர்களின் வசதிக்காக ஆலயத்திற்குப் புறம்பே தென் திசையில் திருபபலி பீடம் உள்ளடக்கிய திறந்த வெளி மண்டபம் கல்த்தூண் கொண்டு ஓட்டுக் கூரையாக கட்டப்பட்டது. 1940 இல் பன்னீர்குளம் பங்குப் பணியாளராக பொறுப்பேற்று 1946 இல் அதிலிருந்து பிரிந்த புதிய பங்கு அலவந்தான்குளத்தில் தன் பணியைத் தொடர்ந்த அருள்பணியாளர் தல்மொய்தா சே.ச. அடிகளாரின் முயற்ச்சியால் உருவானது. பக்தர்களின் வசதிக்காகக் கோவிலிலும் இந்த மண்டபத்திலும் ஒரே நேரத்தில் திருப்பலிகள் நடைபெற்றிருக்கின்றன.


1955-ம் ஆண்டு புளியம்பட்டித் திருத்தலப் பங்கின் பொறுப்பாளராகி சுவாமி எம். அருளானந்தம் அவர்கள் ஆற்றிய பணியாலன்றோ தென்னகத்துப் பதுவை என்று புகழ்பெறும் அளவுக்கு திருத்தலமே புதிய வடிவம் கண்டது! திருத்தலத்தின் நடுநாயகமாய் விளங்கும் இன்றைய கலைநயமிக்க கவினுறு ஆலயம் சரித்திரம் படைத்த  அவரது சாதனைப் பணியாகும். திருத்தலச் சிற்பி என்ற பெயரை அவருக்கு ஈட்டித் தந்து ஏற்றத்தோடும் எழில்மிகு தோற்றத்தோடும் பொலிவு பெற்று விளங்கும் 100’ 40’ அளவுள்ள பெருமைக்குரிய இவ்வாலயத்தை 13.06.1961 புனித அந்தோனியார் திருநாளன்று மதுரைப் பேராயர் பெருந்தகை ஜே. பீட்டர் லெயோனார்டு சே.ச அவர்கள் திருநிலைப்படுத்தித் திறந்து வைத்ததாக ஆலய முகப்பில் பதிக்கப்பட்டுள்ள நினைவுக்கல் கூறுகிறது. புதிய ஆலயத்தில் முதல் திருப்பலியை அப்போது தூத்துக்குடி ஆயராக இருந்த மேதகு தாமஸ் பெர்னாண்டோ ஆண்டகை நிறைவேற்றியதாக அறிகிறோம்.

 Directory of Diocese of Palayamkottai 1973  என்ற கையேட்;டில் காணக்கிடக்கின்ற குறிப்பு : “ Old Little Chapel was extended to the size of a Cathedral Church at a cost of one lakh of Rupees. The plan was given by Thiru Gnanapragasam Pillai, architect of the Loyola College, Madras. The Most Rev. J.P. Leonard S.J. D.D the Archbishop of Madurai blessed this new Church on 10.06.1961.

இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் அந்தோணியார் கொலுவீற்றிருக்கும் புதுமைப்பீடம் மூலப்பீடமாகும். அதனை மாற்றாமல் இடம் பெயர்க்காமல் இருந்த இடத்திலேயே வைத்து அதற்கு ஏற்ப புதிய ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள கல்தூண்களுக்கு மேல் உச்சியில் அந்தோணியார் செய்த 13 அற்புதங்கள் சிறிய ஓவியங்களாக செதுக்கப்பட்டுள்ள. ஆலயத்தின் சுற்றுச்சுவரில் 14 சிலுவைப் பாதை நிலைகளும் ஓவியச் சிற்பங்களாகவே பதிக்கப்பட்டுள்ளன.


Photo Gallery

கோடி அற்புதர் பெற
மின்னஞ்சல் செய்தி பெற
puliampattichurch, st.anthony

ஒலி ஒளி தொகுப்பு

puliampattichurch, st.anthony

புகைப்படங்கள்

online witness, puliampattichurch, st.anthony

பக்தர் சாட்சிப் பதிவு

puliampattichurch, st.anthony

இவ்வார பக்தர்

puliampattichurch, st.anthony

நன்கொடைகள்



உங்கள் கருத்துக்கள் / YOUR FEEDBACK :

Name * Country *

Email *

Newsletter

'புனித' can be typed as 'punitha' in english

இந்த பெட்டகத்தில் ஆங்கில வடிவில் உங்கள் கருத்தைத் தட்டச்சு செய்தால், கீழுள்ள பெட்டகத்தில் தங்கள் கருத்தினை தமிழில் காணலாம்.
(
English content typed in this box will be shown in tamil in the bottom box.

Note: You can also send your feedback in English - type in the first box)