முகப்பு | தொடர்பு கொள்ள | திருப்பலி நேரம் | வரைபடம் | அறிவிப்புக்கள்
puliampatti st.anthony church கருத்துகளை பதிவு செய்ய   puliampatti st.anthony church நண்பருக்கு அனுப்ப   puliampatti St.anthony church நகல் எடுக்க   puliampatti st.anthony church puliampatti st.anthony church  
 

வெகுசன தூய அந்தோனியார் பக்தி முயற்சிகள் - புதுமைக் கிணறு

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்..... வைகாசி மாதத்தின் ஒரு வைகறைப் பொழுது, புளியம்பட்டி வாழ் திரு. காசி நாடார் என்பவர் நாழிக்கிணறு போல் சிறுத்திருந்த புதுமைக் கிணற்றில் கமலை இறைத்துக் கொண்டிருந்தார். கமலைத் தண்ணீரில் ஊத்துமலையிலிருந்து வந்திருந்த சில திருப்பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென..... மாடு .... கலைந்து...... முன்னும் பின்னும் இழுத்து.... ஓரு மாடு கிணற்றுக்குள்Nளு விழுந்து விட்டது. கூடவே.... குளித்துக்கொண்டிருந்த ஒரு தாயும் மகளும் மாட்டோடு கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்தனர். புனிதரின் அருங்குறி அங்கே... நிழலிட... கிணற்றுக்குள் விழுந்த மாடும் மற்றும் தாய், மகள் ஆகிய இருவரும் எவ்வித சிறு காயமுமின்றி மீட்கப்படுகின்றனர்.


சில காலம் கழித்து அதே காசி கமலை இறைத்துக் கொண்டிருந்தார். தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த ஒரு யாத்திரிகர் தண்ணீர் வாளியைக் கிணற்றுக்குள் போட்டுவிட்டார். உடன் வந்த கனத்த சரீரமுடைய ஒருவர் தனது ஊமை மனைவியிடம் உடைகளைக் களைந்து கொடுத்துவிட்டு, காசி உதவியுடன் கமலைக் கயிறு வழியாகக் கிணற்றுக்குள் இறங்கினார். திடீரென்று கமலை இறைக்கும் பட்டறைப் பலகையுடன் கமலைக் கல்லும் உடைய கயிறு வழியாக கிணற்றுக்குள் இறங்கிய மனிதரும் மேலே இருந்து உதவிய காசி கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். ஆனால், என்ன ஆச்சரியம்! இருவருக்கும் சிறிது காயம்கூட ஏற்படவில்லை. அதை விட ஆச்சரியம்.......!! தனது கணவர் கிணற்றுக்குள் விழுவதைக் கண்டு கூச்சலிட முற்பட அந்தப் ஊமைப் பெண் ....... காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள் என்று பேசவே ஆரம்பித்துவிட்டாள்.


அன்றையிலிருந்து இன்றுவரை புதுமைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. தீராத நோயுள்ளவர்கள்..... புதுமை கிணற்றில் 13 வாளி தண்ணீர் இறைத்து குளித்த பின்பு ஆலயத்தை சுற்றி வந்தால் நோய் நீங்கும்.... தீய ஆவிகள் விலகி போகும் என்ற ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் ஏராளமான புதுமைகள் பெற்று வருகின்றனர். நம்பி வந்தோரை தூய அந்தோனியாரும் ஏமாற்றுவதில்லை. நம்பினோருக்கு எல்லாம் கைகூடும்.




   
கோடி அற்புதர் பெற
மின்னஞ்சல் செய்தி பெற
puliampattichurch, st.anthony

ஒலி ஒளி தொகுப்பு

puliampattichurch, st.anthony

புகைப்படங்கள்

online witness, puliampattichurch, st.anthony

பக்தர் சாட்சிப் பதிவு

puliampattichurch, st.anthony

இவ்வார பக்தர்

puliampattichurch, st.anthony

நன்கொடைகள்



உங்கள் கருத்துக்கள் / YOUR FEEDBACK :

Name * Country *

Email *

Newsletter

'புனித' can be typed as 'punitha' in english

இந்த பெட்டகத்தில் ஆங்கில வடிவில் உங்கள் கருத்தைத் தட்டச்சு செய்தால், கீழுள்ள பெட்டகத்தில் தங்கள் கருத்தினை தமிழில் காணலாம்.
(
English content typed in this box will be shown in tamil in the bottom box.

Note: You can also send your feedback in English - type in the first box)