|
வெகுசன தூய
அந்தோனியார் பக்தி முயற்சிகள் - மொட்டை போடுதலும் காது குத்துதலும்
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டும் நோய் தீராதவர்கள்;, புளியம்பட்டி அந்தோனியாருக்கு தங்களின்
முடியை நேர்ச்சையாக கொடுப்பதாக வேண்டிக்கொள்கின்றனர். வேண்டி கொண்ட பின்பு
பக்தியாக நாட்களை நகர்த்தி கடைசியில் புளியம்பட்டிக்கு வந்து அந்தோனியாருக்கு
தங்கள் முடியை நேர்ச்சையாக கொடுக்கின்றனர். பின்பு இங்குள்ள புதுமை கிணற்றில்
குளித்து தங்களின் நோயினின்று விடுதலை பெறுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு
மொட்டை போடுவதே சிறப்பாக இருக்கிறது.
ஒரு சிலர் புனித அந்தோனியாரை எப்போதும் மனதில் நிறுத்த வேண்டுமென்பதற்காகவும்,
அவரை நினைத்து கொண்டே இருக்கவேண்டுமென்பதற்காகவும் மொட்டை போடுகின்றனர்.
குழந்தைகளுக்கு காது குத்துதலும் மிகவும் சிறப்பு வாய்ந்தாக இருக்கிறது. தங்கள்
குழந்தைக்குள்ள நோய் தீர்ந்தால் புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில்
தங்களின் குழந்தைக்கு காது குத்துவதாகவும் பெற்றோர்கள் நேர்ச்சை செய்கின்றனர்.
இதுவரை அந்தோனியாரை நம்பி நேர்ச்சை செய்து ஏமாந்து போனவர்கள் யாருமில்லை என்பதை
அழுத்தமாக சொல்லலாம்.
|