முகப்பு | தொடர்பு கொள்ள | திருப்பலி நேரம் | வரைபடம் | அறிவிப்புக்கள்
puliampatti st.anthony church கருத்துகளை பதிவு செய்ய   puliampatti st.anthony church நண்பருக்கு அனுப்ப   puliampatti St.anthony church நகல் எடுக்க   puliampatti st.anthony church puliampatti st.anthony church  
 

அருட்தந்தை ஆ. அருள் ஆரோக்கியம் M.Sc, Ph.D

அருள்தந்தை அருள் ம. ஆரோக்கியம் 1943ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி கொடுங்காவயல் என்னும் ஊரில், திரு. மரிய ஆரோக்கியம், திருமதி. ஜெபமாலையம்மாள் என்னும் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இந்த தம்பதியினருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். 1971ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, மதுரை மறைமாவட்டத்தில் இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர் தென்காசி பங்கில் உதவித் பங்குப்பணியாளராகவும், திருநெல்வேலி சமூக சேவை சங்கத்தில் துணை இயக்குனராகவும், பேட்டை, இருதயகுளம் மற்றும் கோவில்பட்டி போன்ற தளங்களில் பங்குப் பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். வரலாற்றில் இளங்கலைப்பட்டமும், ஆங்கிலத்தில் முதுகலைபட்டமும், பெற்றிருக்கிறார். பிலிப்பைன்ஸ் சென்று... அங்கு Guidance & Counselling என்ற படிப்பில் ஆய்வு நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார். Counselling Psychology என்பதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

கருமாத்தூர் கிறிஸ்து இல்ல குருமடத்தில் குரு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் பணி புரிந்துள்ளார். ஜீபிலி மேய்ப்புப் பணி நிலையத்தில் இயக்குநராகவும் இருந்திருக்கிறார். இவர் தற்போது நேசன் ஆற்றுப்படுத்தும் மையத்தில் சிறப்பாக பணிபுரிகிறார். ஏராளமான மக்கள் இவரால் பயன் அடைகின்றனர்.

ஆற்றுப்படுத்துதலின் வகைகள்
1. வழிகாட்டுதல் (Guidance)

இவ்வழிகாட்டுதலானது பொதுவாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் வழிகாட்டுவதைப் போன்றது. இதற்கு சிறிது அனுபவம் போதுமானது.

2. ஆலோசனை கூறுதல் (Counseling)

இந்த முறையானது. மன பிரச்சனைகளை தீர்ப்பது, சரியான முடிவுகளை எடுப்பது போன்றவற்றை குறித்து ஆலோசகர் ஆலோசனை கேட்பவரிடம் எடுத்துக்கூறுவது. இது மனநல அறிவியல் சார்ந்த விதிமுறைகளுக்கு உட்பட்டது. இதற்கு Guidance & Counselling ல் முதுகலைப் பட்டம் தேவைப்படுகிறது.


3. மனநல மருத்துவ உதவி

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு இம்முறை கையாளப்படுகிறது. மருத்துவ மனை சூழலில் முறையான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன. இது நீண்ட கால முறையாகும். இதற்கு மனநல மருத்துவத்தில் முனைவர் பயிற்சியும் Clinical therapy  யில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மிகவும் இயல்புநிலை - மனநல – வாழ்க்கை பாதிக்ப்பட்டவருக்கு இம்முறை கையாளப்படுகிறது. M.B.B.S பயின்ற.... அதோடு Psychiatry Learning of Mental Problems and Treatment பயின்றவர்கள் மட்டுமே இந்த முறையை கையாளமுடியும்.


4. குழு மனநல ஆலோசனை

ஒரே வகையான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மனிதர்களை குழுவாக அமைத்து அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆலோசகர்கள் ஆலோசனை தருவது.


சிறந்த மனநல ஆலோசகராக விளங்கும் அருட்தந்தை அருள் ஆரோக்கியம் அவர்கள் புளியம்பட்டி திருத்தலத்திற்கு மாதம் இருமுறை வந்து பல்வேறு வகைப்பட்ட பிரச்சனைகளால் மன அழுத்ததிற்கு உள்ளான மக்களை சந்தித்து அவர்களுக்கு சிறப்பான முறையில் ஆலோசனை கூறுகிறார். அவரால் பயன் பெற்றோர் ஏராளம. அதுமட்டுமல்லாது இளைஞர்களுக்கு வழிகாட்டுதலும், திருமண பயிற்சி வகுப்புகளும், வேலைவாய்ப்பு வழிகாட்டுதலும், குடும்பப் பிரச்சினைகளுக்கு வழிகாட்டுதலும், செய்கின்றார். இத்தோடு ஏழை மாணவர்களுக்கு கல்வியில் உதவிகளும் செய்கின்றார்.

புளியம்பட்டியில் பணி. அருள் ம. ஆரோக்கியம் அவர்களின் பணிகள

தந்தையவர்கள் புளியம்பட்டி தூய அந்தோனியார் திருத்தலத்திற்கு மாதம் இருமுறை (தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாயும் முதல் செவ்வாயும்) வருகின்றார். தந்தையவர்களின் வார்த்தைகளில்: “இத்திருத்தலத்திற்கு ஏராளமாக மன நலம் பாதிக்கப்பட்டோர் வருகின்றனர். அவாகளோடு உரையாடும் போது அவர்கள் சாத்தான் அடித்ததாகவும், தீய சக்தி பீடித்திருப்பதாகவும், ஏதோ ஒன்று அவாகளின் உடலிலும் உள்ளத்திலும் செயல் படுவதாகவும் சொல்கின்றனர். ஆனால் இது அடிப்படையில் வெளியில் வார்த்தைகளில் விவரிக்க முடியாத இயலாத மனப் பிரச்சினைகளாகும்.  கோபம், எரிச்சல், மன்னிப்பின்மை, தன்னிலை ஏற்கமுடியாமை, வெறுப்புணர்வு, அன்பின்மை, போதை பழக்கம், தன்னை வெறுத்தல், சந்தேகம் போன்றவை ஆழ் மன பிரச்சினைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே. அவர்கள் அதற்கு வைக்கும் பெயர் “சாத்தான் பிடி” “தீய ஆவியின் பிடி”. தூய அந்தோனியார் திருத்தலத்திற்கு வரும் இத்தகைய மக்கள் பெரும்பாலும் குறி சொல்பவர்கள், சோசியம் பார்ப்பவர்களிடம் ஏமாந்து இன்னும் அதிக பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
இவர்களுக்கு தேவை ஒழுங்கான பக்தி முயற்சிகளும், மனநல ஆற்றுப்படுத்தலுமே. இப்போது நான் செய்யும் மன நல ஆற்றுப்படுத்தலின் மூலம் பலர் தங்களின் பிரச்சினைகளை புரிந்துக் கொண்டு அதிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்கின்றனர்”.
 

டாக்டர் யு. தியாக ராஜன் RHMP
துணை ஆட்சியராக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்தவர் இவர்.

40 வருடமாக ஹோமியோபதி மருத்துவராக இருக்கிறார். மனநோயால் பாதிக்கப்பட்டோர், பாலியல் தொல்லைகள் உள்ளோருக்கு சிறப்பாக....ஹோமியோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதில் வல்லவர். குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதிலும் சிறந்தவர் இவர். 

மாதம் இருமுறை இத்திருத்தலத்திற்கு வந்து, மனநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை கொடுத்து கொண்டிருக்கிறார். உற்றார் உறவினர்களால் ஒதுக்கப்பட்டோர்... தள்ளப்பட்டோர் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டோர் போன்ற பலவகையான மனநோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு ஹோமியோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கிறார்.

போதை பொருட்களுக்கு அடிமையானோர் இவரைச் சந்தித்து இவரிடம் சிகிச்சை பெறுகின்றனர். முழுமையாக சிகிச்சை பெறும் எல்லோரும் விடுதலை பெறுகின்றனர். பாலியல் பிரச்சனைகள் உள்ளவர்களும், இவரைச் சந்தித்து ஹோமியோபதி மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று குணம் பெறுகின்றனர்.

பலரின் மன நோய் குணமாகாமலே இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்கும்போது இவர் கூறும் பதில் இதுதான்: “ஒரு சிலர் மட்டுமே சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்கின்றனர்... பலர் பாதியிலே சிகிச்சைக்கு முழுக்கு போட்டு விடுவதால் அவர்களின் மன நோய் குணமாகாமலே இருக்கிறது. ஹோமியோபதி ஒரு சிறந்த மருத்துவம். இதில் மன நோய்க்கு சிறப்பான மருந்துகள் இருக்கின்றன. தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டால் எல்லோரும் விரைவிலே குணம் பெறுவது நிச்சயம”.

 

   
கோடி அற்புதர் பெற
மின்னஞ்சல் செய்தி பெற
puliampattichurch, st.anthony

ஒலி ஒளி தொகுப்பு

puliampattichurch, st.anthony

புகைப்படங்கள்

online witness, puliampattichurch, st.anthony

பக்தர் சாட்சிப் பதிவு

puliampattichurch, st.anthony

இவ்வார பக்தர்

puliampattichurch, st.anthony

நன்கொடைகள்



உங்கள் கருத்துக்கள் / YOUR FEEDBACK :

Name * Country *

Email *

Newsletter

'புனித' can be typed as 'punitha' in english

இந்த பெட்டகத்தில் ஆங்கில வடிவில் உங்கள் கருத்தைத் தட்டச்சு செய்தால், கீழுள்ள பெட்டகத்தில் தங்கள் கருத்தினை தமிழில் காணலாம்.
(
English content typed in this box will be shown in tamil in the bottom box.

Note: You can also send your feedback in English - type in the first box)